TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு புதிதாக பாதிப்பு, 29 பேர் பலி

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 226 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,246 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,636 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 23 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை  35,246 -ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,542 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,86,786 ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி  

இன்று மொத்தமாக 1,50,740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,658 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  .

இன்றைய நிலவரம்: 

• இன்றைய பாதிப்பு – 1,658

• இன்றைய மரணங்கள் – 29

• மொத்த பாதிப்பு –  26,38,668 

• இன்றைய டிஸ்சார்ஜ் – 1,542

• இன்றைய சோதனைகள் – 1,50,740

ALSO READ:பள்ளிக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.