3,500 ரூபாயில் ஜியோ ஸ்மார்ட் போன்: அடுத்த மாதம் அறிமுகம்..!

பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில்  அறிமுகப்படுத்த இருக்கிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் களம் இறங்கியுள்ள ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை சந்தைப்படுத்த இருக்கிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் : * 5.5 இன்ச் அளவுகொண்ட தொடுதிரை * ஸ்னாப்டிராகன் 215 ஜி *உள்ளக நினைவகம் 2 ஜிபி, கூடுதல் நினைவகம் 16 ஜிபி *பின்பக்கம் 13 எம்பி … Read more 3,500 ரூபாயில் ஜியோ ஸ்மார்ட் போன்: அடுத்த மாதம் அறிமுகம்..!

70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

குஜராத் மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார். குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார். மோடா கிராமத்தை சேர்ந்த தம்பதி ரபரி(70) – மல்தாரி(75). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை … Read more 70 வயது மூதாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது..!

பாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி.. பதவியை ராஜினாமா செய்தார்..!

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றி அமைக்கப்பட்டபோது பாபுல் சுப்ரியோவிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். அதன்பின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டெரக் ஓ பிரைன் முன்னிலையில் திரிணாமுல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், தான் … Read more பாஜக முன்னாள் அமைச்சர் அதிரடி.. பதவியை ராஜினாமா செய்தார்..!

சென்னை: `பணத்துக்கு பணம்; பைக்குக்கு பைக்’ -மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி?

சென்னை திருவல்லிக்கேணி பழனியம்மன் கோயில் 5-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “என்னுடைய மகன் சரத்குமார், குஜராத்தில் வேலைப்பார்த்து வருகிறார். என்னுடைய கணவர் இறந்ததால் சரத்குமார் ஊருக்கு வந்தான். மீண்டும் அவன் வேலைக்குச் சென்றதால் அவனின் பைக்கை பார்சல் மூலம் அனுப்ப திட்டமிட்டேன். ஆன்லைனில் பார்சல் நிறுவனத்தின் மேலாளர் ரெஜினா என்பவரின் செல்போனில் கடந்த 27.8.2021-ம் தேதி பேசினேன். பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அப்போது அவர் கூகுள் … Read more சென்னை: `பணத்துக்கு பணம்; பைக்குக்கு பைக்’ -மோசடி வழக்கில் போலி பார்சல் மேலாளர் சிக்கியது எப்படி?

மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் 3 ஆண்டுகளாக காலி: மதுரையில் விதிமீறல் கட்டிடக் கண்காணிப்பில் சிக்கல்

மதுரை மாநகராட்சியில் மாநகர முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஒரு நகரின் வளர்ச்சியில் மாநகராட்சியின் முதன்மை நகரமைப்புப் பிரிவு முக்கியமானது. இந்தத் துறைதான், நகரில் அமையும் குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், வணிக ரீதியான கட்டிடங்களுக்கும் ஆய்வு செய்து அனுமதி வழங்கும். தற்போது 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டிடங்களுக்கும், 2 ஆயிரம் சதுர அடி வரையிலான வணிக ரீதியான கட்டிடங்களுக்கும் மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு அனுமதி வழங்கும் அதிகாரம் … Read more மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அதிகாரி பணியிடம் 3 ஆண்டுகளாக காலி: மதுரையில் விதிமீறல் கட்டிடக் கண்காணிப்பில் சிக்கல்

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர். அப்போது விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட … Read more லக்கிம்பூர் கெரி விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்: ஈரான் வலியுறுத்தல்

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் இப்ராஹிம் ரைசி பேசும்போது, “அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் விதிக்கவில்லை. ஆனால், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தீர்க்கமாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை … Read more பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்: ஈரான் வலியுறுத்தல்

7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மறைந்து போகும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியில், கடந்த சில காலமாகவே இந்த வசதியைக் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பக்கத்தில் இந்த வசதி குறித்த அறிமுகத்தை அந்நிறுவனம் கொடுத்துள்ளது. அனுப்பும் செய்திகளை மறைய வைக்கும் கட்டுப்பாடு பயனர்கள் கையில்தான் இருக்கும். வேண்டுமென்றால் அதைப் பயன்படுத்தலாம். இல்லையென்றால் அணைத்து வைக்கலாம். ஆனால், குழுக்களில் … Read more 7 நாட்களில் மறைந்து போகும் மெசேஜ்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

அடுத்து இந்த மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு? சேகர் பாபு கொடுத்த ஹிண்ட்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் அடுத்ததாக ரெய்டு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் சேகர் பாபு சூசகமாக தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று (அக்டோபர் 18) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் … Read more அடுத்து இந்த மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு? சேகர் பாபு கொடுத்த ஹிண்ட்!

பட்டியலின மக்கள் பற்றி அவதூறு பேச்சு.. பாலிவுட் நடிகைக்கு ஜாமீன்!

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை யுவிகா சவுதரிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பாலிவுட் நடிகையான யுவிகா சவுதரி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஹரியானா மாநிலம் ஹன்சி காவல்நிலையத்தில் ராஜாத் கல்சான் என்பவர் யுவிகா சவுதரி குறித்து புகாரளித்தார். இதைத்தொடர்ந்து, யுவிகா சவுதரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் … Read more பட்டியலின மக்கள் பற்றி அவதூறு பேச்சு.. பாலிவுட் நடிகைக்கு ஜாமீன்!