அடுத்த சிக்கலில் சசிகலா.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறையில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்றது குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை என குற்றம் சாட்டி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி, சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இந்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டிஜிபி சிறைத்துறை சத்யநாராயணராவ், சிறைத் துறை கண்காணிப்பாளர் அனிதா, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஐந்து சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன.? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் கர்நாடக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையை அடுத்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா, இளவரசி சிறையில் இருந்தபோது அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் இருந்து 280 தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை 2018ஆம் ஆண்டு முதல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், புதிதாக வழக்கு தொடர்ந்த பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது குறித்து அறிக்கை அளிக்கும்படி தடவியல் ஆய்வுத் துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

இந்த வழக்கில் சசிகலா சிறையில் இருந்து எங்கு சென்றார்.? என்னென்ன சொகுசு வசதிகள் பெற்றார் என்பது உள்ளிட்ட பல தகவல்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடாமல் தற்போது வரை பாதுகாப்பாக வைத்து உள்ளதாகவும், விரைவில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.