அண்ணாத்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி!

தனது அடுத்தடுத்த படங்களில் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் ரஜினிகாந்த்.  காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தில் நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது.  இருப்பினும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. 

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று முன்கூட்டியே படக்குழு அறிவித்திருந்தது.  அதன்பின் இந்தியாவில் சில மாநிலங்களில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால் இத்திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிடலாமா என்று படக்குழு திட்டமிட்டிருந்தது.  பின்பு தீபாவளியன்று வெளியாகும் என்று மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.  

அண்ணாத்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியானது.  இந்த பாடலை மறைந்த முன்னணி பாடகர் எஸ்பிபி பாடியிருந்தார்.  45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இந்நிலையில் சாரகாற்று என்ற அண்ணாத்த படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.  மேலும் இப்படத்தின் டீசரை  ஆயுத பூஜையன்று வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

 

ALSO READ அசால்டாக அசத்தி இருக்கும் சிவகார்த்திகேயன்! டாக்டர் பட விமர்சனம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.