உனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்… சமந்தாவிற்கு அட்வைஸ் சொன்ன வனிதா

|

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவின் விவாகரத்து முடிவு சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தன்மீது பரப்பப்படும் பொய்யான வதந்திகள் குறித்து சமந்தா காட்டமான பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வாழ்க்கையை அவருக்கு பிடித்தமாதிரி வாழ நடிகை வனிதா விஜய்குமார் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமந்தா விவாகரத்து முடிவு

நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கடந்த 2017ல் கோவாவில் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கடந்த வாரத்தில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். தாங்கள் இருவரும் நட்புடன் பிரிவதாகவும் தெரிவித்தனர்.

பல்வேறு வதந்திகள்

பல்வேறு வதந்திகள்

அவர்களின் இந்த முடிவு சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைதளங்களில் இவர்களின் பிரிவு குறித்த பல்வேறு வதந்திகள் உலவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகள் குறித்து கவலை தெரிவித்த சமந்தா, இவை எதுவும் தன்னை உடைத்துவிடாது என்று தெரிவித்திருந்தார்.

சமூகத்தின் ஒழுக்கம் குறித்து கேள்வி

சமூகத்தின் ஒழுக்கம் குறித்து கேள்வி

மேலும் ஒரு பெண் ஒரு முடிவை எடுக்கும்போது இந்த சமூகம் அவளது ஒழுக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகவும் ஆனால் ஆண் ஒரு முடிவை எடுக்கும்போது அவ்வாறு இருப்பதில்லை என்றும் இதை பார்க்கும் பாது இந்த சமூகத்தின் ஒழுக்கம் கேள்விக்குறியாவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா தெரிவித்திருந்தார்.

வனிதா அட்வைஸ்

வனிதா அட்வைஸ்

இதையடுத்து நடிகை வனிதா விஜயகுமார் சமந்தாவிற்கு தன்னுடைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இங்கு சமூகம் என்று எதுவுமில்லை என்றும் உன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நாம் போடும் புகைப்படங்களை மட்டுமே மக்கள் பார்ப்பார்கள் என்றும் அதன் பின்னே உள்ள வீடியோவை பார்ப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வலிமை கூடும்

வலிமை கூடும்

இதில் கவலை படுவதற்கு எதுவுமில்லை என்றும் உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னாடி போய்க் கொண்டே இரு என்றும் உனக்கு மேலும் தேவையான வலிமை கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமாரும் தன்னுடைய விவாகரத்து மற்றும் திருமண முடிவுகளால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Vanitha Vijaykumar’s advice to Samantha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.