எச்சரிக்கை! தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!!

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

Rain 1

வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், வரும், 11ஆம் தேதி கன மழை பெய்யும். வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் 12ஆம் தேதி கன மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

rain

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வரை பலத்த காற்று வீசும்.

எனவே மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு 12ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

 
Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.