ஏர் இந்தியா விற்பனையில் டாடா-வுக்கு மத்திய அரசு போட்ட கண்டிஷன்..!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான JRD டாடா உருவாக்கிய டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு வாங்கி ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து அரசு நிறுவனமாக மாற்றி உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது தகுதியை 1948ல் உயர்த்தியது.

2ஆம் உலகப் போருக்கு பின்பு இந்திய அரசு ஆசை ஆசையாய் வாங்கி ஏர் இந்தியா இன்று மத்திய அரசுக்கு பெரும் சுமையாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

ஆனாலும் ஏர் இந்தியாவை எப்படியாவது கைப்பற்றி மீண்டும் தாய் வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என டாடா எடுத்த முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கைப்பற்றிய நிலையில் மத்திய அரசு முக்கியமான ஒரு கண்டிஷனை வைத்துள்ளது.

நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..!

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இந்தியாவில் தற்போது அதிகளவிலான நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், அடுத்தச் சில வருடங்களிலேயே இதை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலும் இருக்கும் காரணத்தால் மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக டாடா நிறுவனத்திற்கு ஒரு கண்டிஷன் போட்டு உள்ளது.

ஏர் இந்திய

ஏர் இந்திய

இந்தியாவின் பெருமைக்கு உரிய ஏர் இந்திய எந்தக் காலத்திலும் வெளிநாட்டவர்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் செல்லக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தற்போது ஏர் இந்தியாவை விற்பனை செய்ய முக்கியக் காரணமே அதிகளவிலான கடனை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது என்பதால் தான்.

பெரும் தியாகம்
 

பெரும் தியாகம்

ஏர் இந்தியாவை விற்பனை செய்வதே இந்திய அரசின் பெரும் தியாகம் தான். இந்த வேளையில் ஏர் இந்தியா வெளிநாட்டு நிறுவனங்கள் கையில் செல்லக் கூடாது என்பதில் முன்னெச்சரிக்கை எடுப்பதில் எவ்விதமான தவறும் இல்லை.

நிர்வாக மாற்றம்

நிர்வாக மாற்றம்

அந்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு எவ்விதமான சேவை, நிர்வாகம் மாற்றம் செய்யக்கூடாது. 3வது வருடத்தில் இருந்து டாடா சன்ஸ் நிர்வாக முடிவின் படி ஏர் இந்தியாவில் எந்த நிர்வாக மாற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம். உதாரணமாகச் சேவையை மூடுவது, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது போன்றவை.

ஏர் இந்தியா விற்பனை

ஏர் இந்தியா விற்பனை

இதேபோல் 5 வருடம் வரையில் எந்தக் காரணத்திற்காகவும் ஏர் இந்தியாவை விற்பனை செய்யக் கூடாது. 5 வருடத்திற்குப் பின் விற்பனை செய்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ, வெளிநாட்டு சேர்ந்த தனிநபருக்கோ விற்பனை செய்யக் கூடாது. இதேபோல் Legally Indian தகுதி உடையவர்களுக்கு மட்டும் ஏர் இந்தியாவை விற்பனை செய்ய வேண்டும் எனக் கண்டிஷன் மத்திய அரசு போட்டு உள்ளதாக DIPAM அமைப்பின் செயலாளர் துஹின் காந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.

எமோஷனலான முடிவு

எமோஷனலான முடிவு

டாடா குழுமம் ஏர் இந்தியா வாங்கியது ஒருபக்கம் வர்த்தகமாகப் பார்க்கப்பட்டாலும், உண்மையில் இது மிகவும் எமோஷனலான முடிவு. ஆனால் டாடா குழுமம் ஒரு காலமும் விற்பனை செய்யாது என நம்பப்படுகிறது.

ரத்தன் டாடா டிவீட்

ரத்தன் டாடா டிவீட்

மேலும் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா தனது டிவிட்டரில் ஒரு காலத்தில் ஏர் இந்தியா உலகிலேயே மிகவும் மதிப்புத்தக்க விமானச் சேவை நிறுவனமாக இருந்ததது. டாடா நிர்வாகத்திற்கு மீண்டும் இதே நிலைக்குக் கொண்டு வர வாய்ப்பு கிடைத்துள்ளது என அறிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India sold to Tata Sons Talace with a important condition

Air India sold to Tata Sons Talace with a important condition. In 5 year tata sons can sell air india but with a condition. After 5 years tata can sell air india only to indian (legally indian) and Indian companies not to Foreigner or foreign entity.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.