ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில் பாஜக தோல்வி – கடுமையாக விமர்சித்த சிவசேனா

புதுடெல்லி: ஜம்மு -காஷ்மீரில் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் சீக்கியர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து மோடி அரசை சிவசேனா கடுமையான விமர்சித்துள்ளது. சிவசேனா தனது முகநூல் “சாமனா”வில், பாஜகவை குறிவைத்து, பாஜக நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார்கள். ஆனால் ஜம்மு -காஷ்மீரில் இல்லை.

காஷ்மீர் மீண்டும் வன்முறையை நோக்கி செல்கிறது. பணமதிப்பு நீக்கம் பயங்கரவாதத்தை நிறுத்தும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது எனவும் சிவசேனா கடுமையாக பாஜக-வை தாக்கியுள்ளது. இன்னும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையை கட்டுப்படுத்தபடவில்லை மற்றும் பலி எண்ணிக்கையை குறையவில்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது. 

370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது, இனி காஷ்மீர் பண்டிதர்கள் மீண்டும் காஷ்மீர் மாநிலத்திற்கு திரும்பலாம் என பாஜக பெருமை பேசியது. ஆனால் அங்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைப் பார்த்து, அவர்கள் (பாஜக) தப்பி ஓடுகிறார்கள்.

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கையையும் சிவசேனா மேற்கோள்காட்டியுள்ளது. பாஜகவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் “தண்டா படை” (கட்டைகள் படை) அமைத்து, விவசாயிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கட்டார் கூறியுள்ளார். இந்த படை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். நாட்டின் ஏழை மற்றும் நீதி தேடும் விவசாயிகளுக்கு எதிராக அல்ல என சிவசேனா தெரிவித்துள்ளது.

ALSO READ |  பிரியங்கா காந்தி ஒரு போராளி அவரது பாட்டியை போன்றவர்: யோகி அரசை எச்சரித்த சிவசேனா

அதாவது உரிமைக்காக போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக “கட்டைகளை கையில் எடுங்கள்”. சிறை செல்வது பற்றி கலைப்படாதீர்கள். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கட்சி ஆதரவாளர்களிடம் அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை, விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) காஷ்மீரில் அண்மையில் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து கவலை தெரிவித்ததுடன், “ஜிஹாதி” பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது. காஷ்மீரில் இந்துக்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவர்களின் சுதந்திரமான இயக்கம் மற்றும் மீள்குடியேற்றம் மட்டுமே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறியது.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு -காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோர் இந்த விவகாரம் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. காஷ்மீரில் கடந்த ஐந்து நாட்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ALSO READ |  தீவிரவாதிகள் அட்டூழியம்! 56 இஞ்ச் மார்பு ஏன் அமைதியாக இருக்கிறது? சஞ்சய் சிங் கேள்வி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.