டி20 உலகக் கோப்பை பாக். அணியில் ஷோயப் மாலிக்

டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஷோயப் மக்சூத்துக்குப் பதில் ஷோயப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷோயப் மக்சூத் காயம் காரணமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் முகமது வாசிம் தனது அறிவிப்பில் இதுபற்றி கூறியிருப்பது:

“அணி நிர்வாகத்திடம் நடத்திய நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து, மக்சூத் இடத்தில் ஷோயப் மாலிக்கைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவரது அனுபவம் ஒட்டுமொத்த அணிக்கும் உதவும்.”

இதையும் படிக்கமோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிட முடியும்: ரமீஸ் ராஜா கருத்து

டி20 உலகக் கோப்பைக்கான15 வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி செப்டம்பர் 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 8-ம் தேதி ஆசம் கான் மற்றும் முகமது ஹஸ்னைன் ஆகியோருக்குப் பதில் சர்பிராஸ் அகமது மற்றும் ஹைதர் அலி சேர்க்கப்பட்டனர். அணியில் இடம்பெற்றிருந்த குஷ்தில் ஷாவுக்குப் பதில் தயார் நிலை வீரராக இருந்த ஃபகார் ஸமான் சேர்க்கப்பட்டார். இதன்பிறகு அணியில் மேற்கொள்ளப்படும் 4-வது மாற்றம் இது. 

மாலிக் பாகிஸ்தானுக்காக 116 டி20 ஆட்டங்களில் விளையாடி 2,335 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.