தமிழகத்தில் அடங்கும் கொரோனா – இன்றைய நிலவரம்..!

ஹைலைட்ஸ்:

தமிழகத்தில், இன்று ஒரே நாளில், 1,344 பேருக்கு கொரோனா
14 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் இன்று புதிதாக 1 ஆயிரத்து 344 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 787 பேர் ஆண்கள், 557 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 936 ஆக அதிகரித்து உள்ளது.

தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 164 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 137 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நேற்று 169 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று, 164 ஆக குறைந்து உள்ளது. கோவை மாவட்டத்தில், நேற்று 140 ஆக இருந்த பாதிப்பு, இன்று 137 ஆக குறைந்துள்ளது.

10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? – பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் தனியார் மருத்துவமனைகளிலும், 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 768 ஆக அதிகரித்து உள்ளது.

மனைவியால் சமூக வலைத்தளத்தை வெறுத்தேன்; ஆட்டோ டிரைவர்

இன்று மட்டும் 1 ஆயிரத்து 457 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 24 ஆயிரத்து 916 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 16 ஆயிரத்து 252 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.