தூக்கில் தொங்கிய நிலையில் தாய், 2 மகள்கள்.. கொலையா, தற்கொலையா..?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவில் முத்துராமன் என்பவருடைய மனைவி முத்துமாரி(45); அவரது மகள்கள் யுவராணி(21), நித்யா (17) ஆகியோர் வசித்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக முத்துராமனை விட்டுப் பிரிந்து முத்துமாரி மற்றும் அவரது மகள்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் முத்துமாரியின் தாய் கோமதி, முத்துமாரியின் வீட்டுக்குச் சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையெடுத்து கதவை உடைத்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே முத்துமாரி, அவரது மகள்கள் யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையெடுத்து மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, சொத்து பிரச்னை தொடர்பாக முத்துமாரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து பிரச்னை காரணமா அல்லது வேறு எதுவும் காரணமாக மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.