பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம்!

பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் பல ஆஃபர்கள்,இலவச சிறப்பு பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.அதனடிப்படையில் இங்கு ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் வியாபார யுக்தி வைரலாகியுள்ளது.  எடுத்துக்காட்டாக,’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் வரும் ஒரு காட்சியில், 50 பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டாம் என பரோட்டா கடை ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கும்.   இந்த ஆஃபரை பார்த்த கதைப்படி சாப்பாட்டு ராமனான நடிகர் சூரி 50  பரோட்டாவையும் சாப்பிட்டு அசர வைத்திருப்பார்.அந்த படத்திலிருந்து தான் அவர் பரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.அது இருக்கட்டும்..நாம இப்போ கதைக்கு வருவோம்.  

இந்த படத்தின் காட்சியையே சிறிது மாற்றத்தோடு தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியாணி கடை ஒன்று செய்துள்ளது.ஆனால் இந்த ஆஃபருக்கு பரிசுத்தொகை சற்று அதிகம்.  தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது.  அது என்னவென்றால், 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் அந்த நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்குப் ‘பரோட்டா திருவிழா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சோறு போட்டு தங்க நாணயம் கொடுக்குறாங்கனு தெரிஞ்சா நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? உடனே இதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பரோட்டா திருவிழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.  இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.

parota

இதையடுத்து வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடையின் உரிமையாளர்கள் அறிவித்தபடியே தங்க நாணயத்தை வழங்கினர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், “எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.  அந்த வகையில் ‘பரோட்டா திருவிழா’ நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதற்குத் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ பரோட்டாவால் பரிதாபமாக பறிப்போன உயிர்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.