புதிய "டபுள்" கலரில் வரும் Realme Buds Air 2; அக்.13-இல் இந்திய அறிமுகம்!

ஹைலைட்ஸ்:

ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்
அக்.13 ஆம் தேதி நடக்கும்
புதிய போனுடன் புதிய கலர் வேரியண்ட் வரும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த மார்ச் மாதத்தில், ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடன் வரக்கூடிய மலிவான TWS இயர்போன்களில் ஒன்றாக அதன் பட்ஸ் ஏர் 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியது.

ஆளுக்கு 2 வாங்கும் ஆபர் விலையில் Dizo GoPods, Dizo GoPods Neo அறிமுகம்!

இப்போது, இந்த சீன நிறுவனம் இந்தியாவில்
ரியல்மி பட்ஸ்
ஏர் 2 க்கான புதிய வண்ண விருப்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது – அது பச்சை வண்ண மாறுபாடு ஆகும்.

இது ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனுடன் வருகிற அக்டோபர் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த தயாரிப்பு ஏற்கனவே மூன்று வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது – க்ளோஸர் ஒயிட், க்ளோஸர் பிளாக் மற்றும் க்ளோஸர் கோல்ட் ஆகும்.

வரவிருக்கும் பச்சை நிற மாடலை வாங்குவோருக்கு வெளியே பச்சை நிறம் மற்றும் உள்ளே கருப்பு நிறம் கொண்ட சார்ஜிங் கேஸ் கிடைக்கும். கூடுதலாக, இயர்பட்களுக்கு பச்சை வண்ணப்பூச்சு கிடைக்கும், ஆனால் காதுக்குள் செல்லும் பகுதி கருப்பு வண்ணப்பூச்சை பெற்றிருக்கும்.

புதிய நிறத்தைத் தவிர, மற்ற அனைத்தும் அப்படியே இருக்கும், அதாவது அம்சங்களில் எந்த மேம்பாடுகளை, மாற்றமும் இருக்காது.

இந்த TWS இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆதரிக்கின்றன. 25 டிபி வரை ஆக்டிவ் நாய்ஸ் ரத்து செய்ய, ரியல்மி பட்ஸ் ஏர் 2 வெளிப்புற சத்தத்தை ஒரு ஃபீட்-ஃபார்வர்ட் மைக்ரோஃபோன் மூலம் அதை கண்காணிக்கிறது, அதை ரத்து செய்ய, இயர்பட்ஸ்-ஐ ரிவர்ஸ் நாய்ஸ் கேன்சல் சவுண்ட்டை அனுப்புகிறது.

இந்த செயல்பாடு மிகக் குறைந்த அதிர்வெண் சத்தத்தை பில்டர் செய்ய வழிவகுக்கிறது. மேலும் இந்த திறன் வீட்டு உபகரணங்களின் சத்தத்தையும் ரத்து செய்யும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ரியல்மி பட்ஸ் ஏர் 2 ஆனது Transparency பயன்முறையிலும் (மோட்) வருகிறது, இது பயனர்கள் ஒரே கிளிக்கில் சுற்றுப்புற ஒலியைக் கேட்க அனுமதிக்கிறது. இதன் இன்-இயர் வடிவமைப்பானது பிஸிக்கல் நாய்ஸ் கேன்சலேஷனை கொண்டிருந்தாலும் கூட, இதன் டிரான்ஸ்பிரென்ஸி மோட் உங்கள் ஹெட்ஃபோன்களை கழட்டாமலேயே மற்றவர்களுடன் பேசுவதை எளிதாக்குகிறது.

சிப்பைப் பொறுத்தவரை, ரியல்மி புதிய தலைமுறை இன்டெலிஜென்ட் நாய்ஸ் ரிடெக்ஷன் சிப் ஆன ஆர்2 சிப்பை பிரத்தியேகமாக தனிப்பயனாக்கியுள்ளது. இந்த சிப்பின் மிகப்பெரிய சிறப்பம்சம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆதரிக்கும் திறன் ஆகும்.

இது அற்புதமான கம்யூட்டிங் யல்திறன், சிறந்த ஆற்றல் திறன், மிகவும் நிலையான இணைப்புகள் மற்றும் உயர்தரமான அழைப்புகளை உறுதி செய்கிறது.

ஆர் 1 சிபி ஆனது இந்த இயர்பட்ஸின் பேட்டரி ஆயுளை 80% அதிகரிப்பதாகவும், அதே நிலைமைகளின் கீழ் லேடன்ஸியை 35% குறைப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது. மேலும் சிக்னல் ரிசெப்ஷன் மற்றும் டிரான்ஸ்மிஷன் முறையே 3dB மற்றும் 2dB ஆக மேம்படுத்தப்பட்டுள்ளன. இது 10 மீ இணைப்பு வரம்பைக் கொண்ட சமீபத்திய ப்ளூடூத் 5.2-ஐ ஆதரிக்கிறது.

இந்த இயர்பட்ஸில் அழைப்புகளுக்கான டூயல் மைக் நாய்ஸ் கேன்சலேஷனும் உள்ளது. இது AAC ஆடியோவை ஆதரிக்கிறது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, Chainsmokers-ஆல் டியூன் செய்யப்பட்ட பாஸ் பூஸ்ட் + மோட் மற்றும் 10 மிமீ டயமண்ட் கிளாஸ் ஹை-ஃபை டிரைவர்ஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஸ்பிளாஷ், மழை மற்றும் வியர்வையைத் தடுக்க ரியல்மி பட்ஸ் ஏர் 2 ஆனது ஐபிஎக்ஸ் 5 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது ரியல்மி பட்ஸ் ஏர் 2-வின் கேமிங் மோட் 88 மில்லி செக் சூப்பர் லோ லேடன்ஸி உடன் வருகிறது.

நீங்கள் இதன் சார்ஜிங் கேஸைத் திறந்தவுடன் ரியல்மி பட்ஸ் ஏர் 2 தானாகவே உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும். முதல்முறையாக நீங்கள் இதை ஒரு சாதனத்துடன் இணைக்கும்போது இணைப்பை அமைக்க Google Fast Pair உதவுகிறது.

ANC-ஐ இயக்க / அணைக்க, கேமிங் மோட்-ஐ ஆன் மற்றும் ஆப் செய்ய, EQ அமைப்புகளை கட்டுப்படுத்தவும் மேலும் பலவற்றை செய்யவும் ரியல்மி கனெக்ட் ஆப்பைப் பயன்படுத்தலாம்.

ரியல்மி பட்ஸ் ஏர் 2 ஆனது ஏஎன்சி ஆஃப் உடன் மொத்தம் 25 மணிநேர பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது. ANC-ஐ ஆன் செய்து வைத்திருந்தால், ரியல்மி பட்ஸ் ஏர் 2 ஆனது 22.5 மணி நேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்கும்.

சார்ஜிங்கை பொறுத்தவரை, இதை 10 நிமிடங்கள் (இயர்பட்ஸ் + சார்ஜிங் கேஸ்) சார்ஜ் செய்தால் பயனர்களுக்கு இரண்டு மணிநேர பிளேபேக்கை வழங்கும். இது 100% (இயர்பட்ஸ்) சார்ஜ் ஆக 1 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் என்றும் ரியல்மி நிறுவனம் கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.