100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ளவர்கள் பட்டியலில் இணைந்தார் முகேஷ் அம்பானி

புதுடெல்லி:
சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 
இந்நிலையில், 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். 
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள், அதாவது 7 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 64 வயதான முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்ததை அடுத்து அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.