20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
 இந்த நிலையில் பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற  சோகைப் மசூத்  காயம் காரணமாக விலகியுள்ளார் .

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் கடந்த அக்டோபர் 6ல் நடைபெற்ற போட்டியில் விளையாடிய    சோகைப் மசூத்   காயம் அடைந்ததால் . உலகக்கோப்பை அணியிலிருந்து  விலகுகிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .
 மேலும் அவருக்கு பதிலாக  சோயிப் மாலிக்  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.