அதிமுகவில் மாற்றம் அவசியம், புயலை கிளப்பிய செல்லூர் ராஜு..!

கட்சியை வழி நடத்த ஒரு தலைமை, அதை பின்பற்ற தொண்டர்கள் என
ஜெயலலிதா
இருக்கும் வரை
அதிமுக
அப்படிதான் இருந்து வந்தது. கட்சிக்குள் பூசல்கள் இருந்தாலும் பொதுவெளி விவாதத்திற்கு எம்ஜிஆர் , ஜெயலலிதாவோ யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி உடைந்த தேங்காய் போல சிதறுவதும் அதை கம் போட்டு ஒட்ட முயற்சிப்பதுமே இப்போது கட்சியின் கடைமையாகிவிட்டது.

என்னதான் அதிமு ஒரு எக்கு கோட்டை என்று மூத்த தலைவர்கள் கூறினாலும், கட்சி முன்னை போல இல்லை என்று அதிமுகவின் கடைக்கோடி தொண்டருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், அதிமுக வலுவிழந்து இருப்பதை ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன் என்று
சசிகலா
தினம் தினம் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லோரும் அதிமுக பிள்ளைகள்தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்து காட்டுவார்கள். கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும்.

திமுகவுடன் கூட்டணி; ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த மகன்!

இப்போது அதுபோன்ற சூழல் இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன். கவலைப்படாதீர்கள்” என்று தனது இறுதி முழக்கத்தை சசிகலா வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்
செல்லூர் ராஜு
” அதிமுகவில் சில மாற்றம் செய்து கட்சியை வளர்க்கவேண்டியதும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்றும், தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது” என இவ்வாறு கூறினார். சசிகலா கூறிய சில வார்த்தைகளை செல்லூர் ராஜுவும் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.