அதிர்ச்சி தகவல்! கொரோனா தடுப்பூசி போடாத 87% பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 87% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 88,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 63% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். 24% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

13% முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா பாதிப்பு வீரியம் அடைந்து மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,816. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,626.

corona death

இதன் மூலம் உயிரிழந்தோரில் 87% பேரும், ஐசியூவில் அனுமதிக்கப்பட்டோரில் 76% பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும், தொற்று பாதிப்புக்கு ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாக, தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

corona death

பாதிப்பின் வீரியம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் குறைவாக உள்ளது. அதே சமயம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஐசியூவில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பது அதிகளவில் உள்ளது. மேலும் தற்போது தடுப்பூசி போடுவது தற்போது அதிகரித்துள்ளதால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.