இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம் Oct 10, 2021

இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமான ஒவ்வொரு நபருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் 95 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்ட உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி,  தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். உலகின் மிகவும் பெரிய வேகமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் வெற்றிகரமாக முன்னேறுவதாக மோடி குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.