இரண்டாக உடைந்த விமானம் – விபத்தில் 16 பேர் பலி

ஹைலைட்ஸ்:

ரஷ்யாவில் இரண்டாக உடைந்த விமானம்
விபத்தில் 16 பேர் பலி

ரஷ்யாவில், விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், 16 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

மத்திய ரஷ்யாவின், டாடர்ஸ்டான் குடியரசின் மெண்செலின்ஸ்க் நகரை ஒட்டிய பகுதியில், 22 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

டென்சன் ஆவாதிங்க சார்… மஜாஜ் பண்ண வறீங்களா.. ஆளும் கட்சி பிரமுகரை அழைத்த மஜா பெண்

விபத்துக்கு உள்ளான விமானம், 2 இன்ஜின் கொண்ட எல் – 410 ரக விமானம். இந்த விமானம் சிறிய தூர போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் பாராசூட் சாகச வீரர்கள் குழு ஒன்று பயணம் செய்தது. அதில் மொத்தம் 22 பேர் பயணித்து உள்ளனர். விபத்தில் பலத்த சேதமடைந்த விமானம் இரண்டாக உடைந்துள்ளது.

ஒரு காபிக்காக இந்த பொண்ணு செஞ்ச வேலைய பாருங்க! – வீடியோ உள்ளே!

இந்த விமானம் 1987 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமான விபத்து
குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவில், அண்மைக்காலமாக விமான விபத்துகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.