உள்ளாட்சி 2ம் கட்ட தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

9 மாவட்ட 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 9 மாவட்ட 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க- டி20 உலகக் கோப்பை பாக். அணியில் ஷோயப் மாலிக்

காஞ்சிபுரம் – 72.00 செங்கல்பட்டு – 70.00, வேலூா் – 68.00, ராணிப்பேட்டை – 75.03,  திருப்பத்தூா் – 73.05, விழுப்புரம் – 83.06, கள்ளக்குறிச்சி – 82.00, திருநெல்வேலி – 65.00, தென்காசி – 70.00 சதவீதம் என மொத்தம் 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. ஏற்னெவே அக்.6ஆம் தேதி 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.