'கிங் இஸ் பேக்' டோனிக்கு விராட் கோலி பாராட்டு

புதுடெல்லி,
14வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் பிளே ஆஃப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.  9 வது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சென்னை அணி சாதனை படைத்துள்ளது.

இந்தநிலையில், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனியை விராட் கோலி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.
சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி. இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி, ‘கிங் இஸ் பேக்’ என்று  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட்டில் என்றும் தலைசிறந்த பினிஷர் எனவும், மீண்டும் ஒருமுறை தன்னை துள்ளிக் குதிக்கச் செய்ததாகவும் கோலி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.