சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் செம கணிப்பு..!

தங்கத்தில் முதலீடு செய்ய திரும்பத் திரும்ப நிபுணர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். நிபுணர்கள் சொல்வதுபோல காலம் காலமாக தங்கம் விலையானது கூடிக் கொண்டே தான் செல்கின்றது. இது எதிர்காலத்தில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொடர்ந்து நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

ஏன் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது ?ஏன் இவர்கள் இன்னும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று கூறிக்கொண்டு வருகின்றனர். என்னதான் காரணம் வாருங்கள் பார்க்கலாம்.

கூடிக் கொண்டே வரும் தேவை

தங்கத்தின் தேவை தொடர்ந்து நீண்ட கால நோக்கில் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. அதோடு தொடர்ந்து இந்த விகிதமானது சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்துக்கு சிறந்த இடமாக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்கவுண்ட் சரிவு

டிஸ்கவுண்ட் சரிவு

வரவிருக்கும் விழா பருவத்தில் தங்கத்திற்கான தேவையானது, அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2 மாதங்களில் தங்கத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த, டிஸ்கவுண்ட் விலையானது தற்போது சரிவைக் கண்டுள்ளது. இதனால் இந்தியாவைப் பொருத்தவரையில் தங்கம் விலை இன்னும் சற்று கூடுதலாக அதிகரிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

சீனாவில் அதிகரிக்கலாம்
 

சீனாவில் அதிகரிக்கலாம்

மேலும் உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவிலும் தங்கத்தின் தேவையானது, வரவிருக்கும் விடுமுறை கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனால் இது இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் சரிவு

ரூபாய் சரிவு

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எனது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவில் தங்கம் விலையானது, இன்னும் சரியாமல் வலுவான நிலையிலேயே காணப்படுகிறது. இது வரவிருக்கும் வாரங்களிலும் இப்படியே தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

தொடர்ந்து டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது வட்டி இல்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் மீண்டும் உச்சம் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஆரம்பத்தில் சற்று அதிகரிப்பது போன்று தோன்றினாலும், தொடர்ந்து பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்திலேயே இருந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 1762.50. டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக விலையாக 1771.50 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதே புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 1745.40 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று முடிவில் 1757.25 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. இது வரும் வாரத்திலும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று 22.600 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 23.220 டாலர்கள் வரையிலும், புதன் கிழமையன்று குறைந்தபட்சமாக 22.185 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 22.680 டாலர்களாகவும் முடிவுற்றது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது இந்த வாரத்தில் சற்று வலுவான ஏற்றத்திலேயே காணப்பட்டது. இது கடந்த திங்கட்கிழமையன்று தொடக்கத்தில் 10 கிராமுக்கு 46,532 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே 46,341 ரூபாயினை குறைந்தபட்சமாக தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 47,370 ரூபாயினை தொட்ட நிலையில், முடிவில் 47,037 ரூபாயாக முடிவுற்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9100 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 60,517 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 60,070 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 62,708 ரூபாயினை தொட்டு, முடிவில் 61,801 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 15,800 ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 2 நாட்கள் சரிவிலும், மற்ற நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,056 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,439 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,512 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,000 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே சற்று குறைந்தது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 47,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 48,420 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 65.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 659 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,900 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 64,800 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 65,900 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் பிசிகல் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் வரவிருக்கும் திருமண முகூர்த்தம், விழாக்கள் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்பதால் அது விலையில் எதிரொலிக்கலாம். ஆக வரும் வாரத்தில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல் பேப்பர் தங்கத்தினையும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold price weekly update: Gold rate may rise in coming weeks

Gold weekly updates.. Gold rate may rise in coming weeks

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.