சூர்யாவின் ஜெய்பீம் படம் குறித்த புதிய அப்டேட்!

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். 

பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுஉள்ளது. இந்த படத்திற்கு ஜெய் பீம் (Jai Bhim) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். அத்துடன் இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சூர்யாவின் (Actor Suriya) 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

ALSO READ | Viral: தனது படத்தை மூக்கால் வரைந்த ரசிகரை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா!

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தின் பின்னணி இசை குறித்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்கள் தெரிவித்துள்ளார். பல இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து பின்னணி இசை அமைக்கும் பணியின் போது எடுத்த வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் அடுத்த அப்டேட் மிக விரைவில் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருங்கள் நண்பர்களே என்றும் சீன் ரோல்டன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான பின்னணி இசை குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

 

 

திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. முன்னதாக நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று ஜெய் பீம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இது சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரது பாராட்டினையும் பெற்றது. இக்கதை பழங்குடிப் பெண்ணுக்கு நேர்ந்த ஒரு உண்மைச் சம்பவம் என்று ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பல மனிதநேய தீர்ப்புகளை வழங்கிய சென்னை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவியும் எடுக்கப்படுவதாகவும் ஒரு செய்தி வெளி வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Soorarai Pottru: இந்தியில் ரீமேக் ஆகிறது சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.