சூலாயுதத்தை கையில் எடுத்த போதையன்ஸ்.. சாமியை அவமதித்ததாக கைது Oct 10, 2021

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலை கோயிலில் மதுபோதையில் சூலாயுதத்தை எடுத்து ஆடியபடி சாமி சிலையை அவமதித்த சம்பவத்தில், போதை இளைஞர்கள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டதால் போலீசில் சிக்கிய போதையன்ஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் மலை உச்சியில் கம்பத்துராயன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் 3-வது சனிக்கிழமை பூஜை நடைபெற்றது.

வழிபாடு நடத்தியவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் கோயிலுக்கு சென்ற சில இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த சூலாயுதத்தை எடுத்து விளையாடியதோடு, சாமி சிலையையும் அவமதித்ததாக கூறப்படுகிறது.

தாங்கள் செய்த சேட்டைகளை சாதனையாக நினைத்து அவர்களே வீடியோ எடுத்து அதனை தங்களது முக நூலில் பதிவு செய்துள்ளனர்.


இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்ட நிலையில், அவர்கள் பதிவிட்ட வீடியோக்களையே ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிந்து சாமி சிலையை அவமதித்த வீடியோ வெளியிட்டதாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், டேவிட், நாகேந்திரன், ராகுல் அபிஷேக், மகேந்திரன், பிரேம்குமார், ராஜேஷ், ஸ்ரீகாந்த், சூரியன் ஆகிய 10 பேரை கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

யாருக்கும் தெரியாமல் செய்த சேட்டையை ஊருக்கே தெரியும் வகையும் வீடியோ எடுத்து முக நூலில் பதிவிட்டதால் 10 பேரும் கம்பி எண்ணி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.