சோமாலியாவில் ராணுவம் அதிரடி வேட்டை; 5 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

மொகதிசு,
சோமாலியா நாட்டில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சாலையோரம் வெடிகுண்டுகளை வைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் இறங்கியுள்ளது.  இதன் ஒரு பகுதியாக, சோமாலியா தேசிய ராணுவ படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து வேட்டை நடந்து வருகிறது.  இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என ராணுவ ஒத்துழைப்பு மற்றும் ஊடக பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.