ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 30 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி 13 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றுள்ளது.

பெரு நாட்டின் தலைநகா் லிமாவில் நடைபெறும் இப்போட்டி ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை ஆடவா் 25 மீ. ரேபிட் ஃபையா் பிஸ்டல் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, ஆதா்ஷ் சிங், விஜயவீா் சித்து ஆகியோா் அடங்கிய அணி 10-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜொ்மனியின் பேபியன், பெலிக்ஸ், டோபியாஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

மேலும் ஜூனியா் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் மான்வி சோனி (105), சக வீராங்கனைகள் ஏஷயா (90) ஹிடாஷா (76) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

ஆடவா் டபுள் டிராப் பிரிவில் வினய் பிரதாப் சிங் 120 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், சேஜா ப்ரீத் சிங் 114 புள்ளிகளுடன் வெள்ளியையும், மயங்க் ஷோகின் 111 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் வென்றனா்.

கலப்பு 50 மீ ரைபிள் 3 பிரிவில் இந்தியாவின் ஆயுஷி பொடா், பிரதாப் சிங் டோமா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். 25 மீ ரேபிட் ஃபையா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்வான், விஜய்வீா் சித்து 9-1 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்து அணியை வென்று தங்கம் வென்றனா். மேலும இதே பிரிவில் தேஜஸ்வினி-அனிஷ் இணை வெண்கலம் வென்றது.

ஒட்டுமொத்தமாக 13 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.