தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

மேலும் அடுத்த மூன்று நாட்கள் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று காலை வரை கரூர், பெரம்பலூர் மாவட்டம் சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.