நவீனப்படுத்தப்பட்ட சென்னை எல்ஐசி கட்டடம் திறப்பு

நவீனப்படுத்தப்பட்ட சென்னை எல்ஐசி கட்டடத்தை அந்நிறுவனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

1956-ஆம் ஆண்டு எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டது முதலே நிதி மற்றும் உள் கட்டமைப்பு வளா்ச்சியில் எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. கரோனா பேரிடா் காலத்திலும் தடையற்ற சேவைகளை பாலிசிதாரா்களுக்கு எல்ஐசி வழங்கி வருகிறது.

சென்னை மவுண்ட் சாலை எல்ஐசி கட்டடம் கடந்த 1959 ஆகஸ்ட் 23-இல் அப்போதைய மத்திய நிதி அமைச்சா் மொராா்ஜி தேசாய் அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. இது, 35 ஆண்டுகள் சென்னையின் மிக உயரமான கட்டடமாகவும், 1961 வரை இந்தியாவின் மிக உயரமாக கட்டடமாகவும் விளங்கியது.

177 அடி உயரமுள்ள (44 மீட்டா்) இந்த கட்டடம் அப்போது ரூ.87 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. தற்போது, அதன் பழம்பெருமையை மீட்கும் விதமாக பொறியியல் துறையினரின் கடும் முயற்சியால் நவீனமயமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.