பூண்டுக்குழம்பு சூப்பர்.. நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க..பாராட்டுக்களை குவித்த பிக்பாஸ் குக்கிங் டீம்!

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு டீம் குறித்தும் ரிவ்வியூ செய்தார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த 4 சீசன்களிலும் முதல் வார கேப்டனை பிக்பாஸ் தான் தேர்வு செய்வார். அவர் மூலம் டீம்கள் பிரிக்கப்படும்.

ஆனால் இம்முறை கேப்டன் இல்லாமல் நான்கு அணிகளை தாமாக முன்வந்து பிரித்துக்கொள்ளும் படி ஹவுஸ்மேட்டுகளுக்கு அறிவுறுத்தினார் பிக்பாஸ்.

டீம்ஸ் – கமல் ரிவ்வியூ

அதன் அடிப்படையில் குக்கிங் டீம், பாத்ரூம் க்ளீனீங், பாத்திரம் கழுவும் டீம், ஹவுஸ் க்ளீனிங் என 4 டீம்கள் பிரிக்கப்பட்டன. இந்நிலையில் டீம்கள் பிரிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் பிக்பாஸ் வீட்டின் டீம்கள் குறித்து இன்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் ரிவ்யூ செய்தார்.

நீங்கதான் மிஸ் பண்ணீட்டிங்க

நீங்கதான் மிஸ் பண்ணீட்டிங்க

ஒவ்வொரு டீம் குறித்தும் சக போட்டியாளர்களிடம் விமர்சனங்களை கேட்டறிந்தார் கமல். அதன்படி குக்கிங் டீம் குறித்து முதலில் பேசிய இமான் அண்ணாச்சி, இந்த வாரம் பூண்டு குழம்பு வைத்தார்கள், அது அவ்வளவு அருமையாக இருந்தது என பாராட்டினார். மேலும் நீங்கள் தான் மிஸ் செய்து விட்டீர்கள் என்றும் கமலிடம் கூறினார் அண்ணாச்சி.

மிச்சமாகும் சாதத்தை பயன்படுத்தினர்

மிச்சமாகும் சாதத்தை பயன்படுத்தினர்

குக்கிங் டீம் குறித்து பேசிய ஸ்ருதி, எப்போதும் வீட்டில் சாப்பாடு இருந்தது. நம் வீட்டில் இருப்பது போன்ற சுதந்திரம் இருந்தது என்றார். அவரை தொடர்ந்து பேசிய இசை வாணி, மிச்சமாகும் சாதத்தை வைத்து பழைய சாதம் புளிசாதம் செய்து பயன்படுத்தினார்கள் என்றும் கூறினார்.

எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான்

எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான்

தாமரை செல்வி பேசும் போ து, எப்போதும் டீ வேண்டுமா காப்பி வேண்டுமா என்று கேட்டு கவனிக்கிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய சின்னப்பொண்ணு கிராமத்தில் சமைப்பதுப் போல் தான் சமைக்கிறோம் என்றார். யாருக்கும் இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக கடைசியாக சாப்பிடுவோம் என்றார்.

சாம்பாரில் தண்ணீர் கலப்போம்

சாம்பாரில் தண்ணீர் கலப்போம்

தொடர்ந்து பேசிய பிரியங்கா, எல்லாரும் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவோம் என்றார். மேலும் அவ்வப்போது பத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது என்பதற்காக திக்காக இருக்கும் சாம்பாரில் தண்ணீர் சேர்ப்போம் என்றும் ரகசியத்தை கூறினார்.

எல்லா டீம்மும் ஓகே தான்

எல்லா டீம்மும் ஓகே தான்

பின்னர் பேசிய சிபி தற்போது தான் டீ போடவும் தயிர் போடவும் கற்றுக்கொண்டதாகவும், கூறினார். மொத்த பேரும் கூறிய கருத்தை கேட்ட கமல்ஹாசன், கிச்சன் டீம்முக்கு விமர்சனமே இல்லை பாராட்டு தான் என்றார். இதேபோல் மற்ற டீம்களான பாத்ரூம் க்ளீனிங், ஹவுஸ் க்ளீனிங் டீம் ஆகியவையும் இந்த வாரம் பாராட்டுக்களை பெற்றது.

English summary
Biggboss Tamil 5: Kamal reviews about Biggboss house teams. Kitchen Team gets applause in first week itself.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.