மாஸ்டர் டைரக்டருடன் மீண்டும் இணையும் விஜய்… செம கலக்கல் அப்டேட்

|

சென்னை : விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. விஜய்யின் 65 வது படமாக உருவாகி வரும் இந்த படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2021 ம் ஆண்டை மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியுடன் துவக்கி உள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

வசூல் சாதனை படைத்த மாஸ்டர்

50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஹவுஸ்ஃபுல் ஆகி, உலக அளவில் வசூல் சாதனை படைத்த படம் மாஸ்டர். கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடந்த சினிமா ரசிகர்களை மீண்டும தியேட்டர் நோக்கி வரவழைத்த படம் மாஸ்டர் தான். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றிற்க பிறகு சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்த படம் மாஸ்டர் என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்பட்டது.

விறுவிறுப்பான விஜய் படங்கள்

விறுவிறுப்பான விஜய் படங்கள்

மாஸ்டர் படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் அடங்குவதற்குள் பீஸ்ட் படத்தின் வேலைகளை துவக்கி விட்டார் விஜய். தற்போது பீஸ்ட் படம் முடிவடைவதற்குள்ளாக விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வர துவங்கி விட்டன.இந்த படத்தை தெலுங்கு டைரக்டரான வம்சி பைடிபள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

ஆயுத பூஜையன்று தளபதி 66

ஆயுத பூஜையன்று தளபதி 66

ஆயுத பூஜையன்று சிறப்பு பூஜையுடன் தளபதி 66 படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்திற்கு தமான் இசையமைக்க போவதாகவும், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடிக்க போவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் வில்லன் ரோலில் இல்லாமல், பாசிடிவ் ரோலில் தான் பிரகாஷ் ராஜ் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் மாஸ்டர் கூட்டணி

மீண்டும் மாஸ்டர் கூட்டணி

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, மாஸ்டர் பட கூட்டணியில் மற்றொரு படம் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ், அஜிருத், தயாரிப்பாளர் லலித் குமார் காம்போவின் தளபதி 67 படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். மாஸ்டர் படத்தின் ஷுட்டிங் நடக்கும் போதே விஜய்க்காக மற்றொரு கதையை தயார் செய்து வைத்து விட்டாராம் லோகேஷ் கனகராஜ்.

வாக்கு கொடுத்த விஜய்

வாக்கு கொடுத்த விஜய்

அதோடு லலித் குமாரின் சிறப்பான பணி விஜய்யை கவர்ந்து விட்டதால், அவரோடு மற்றொரு படம் பண்ண விஜய் அப்போதே வாக்குக் கொடுத்து விட்டாராம். கோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். விஜய்யும் பீஸ்ட் மற்றும் அதைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்க போகிறார்கள்.

2022 ல் தளபதி 67

2022 ல் தளபதி 67

இதனால் இருவருமே தங்களின் தற்போதைய படங்களை முடித்த பிறகு, 2022 ம் ஆண்டு மத்தியில் தளபதி 67 படம் பற்றி இறுதி செய்யப்பட உள்ளதாம். திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில், மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி விடுமாம்.

English summary
latest buzz in kollywood is that vijay decided to reunite master combo in thalapathy 67. lokesh kanagaraj already finalise a narrate for vijay. if all are going well, mid of the 2022 thalapathy 67 will finalise.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.