மீண்டும் இணையும் நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணி!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஓடிடியில் இத்திரைப்படம் வெளியாகிறது என்று கூறப்பட்ட நிலையில் நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  டாக்டர் திரைப்படத்திற்கு கோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ அசால்டாக அசத்தி இருக்கும் சிவகார்த்திகேயன்! டாக்டர் பட விமர்சனம்!

பொதுவாக மற்ற திரைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லாத சூர்யா முதற்கொண்டு டாக்டர் படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.  இயக்குனர் சங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து ரசித்த படம் டாக்டர் என்று புகழ்ந்தார்.  மேலும் பல இயக்குனர்களும், நடிகர்களும் இப்படத்தினை புகழ்ந்து பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் நெல்சன் இயக்க உள்ளதாகவும் இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  டாக்டர் திரைப்படம் வெளியீட்டில் இருந்த சிக்கலை கடைசி நிமிடத்தில் சிவகார்த்திகேயன் தனது சொந்த பணத்தின் மூலம் தீர்த்து வைத்தார்.  இதனால் சிவகார்த்திகேயன் மீண்டும் கடனாளி ஆகி உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. 

கடைசி நிமிடத்தில் டாக்டர் படம் வெளியீடு பிரச்சினை முடிவடைந்ததில் பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ஒருவரும் உதவி உள்ளனர் என்று கூறப்படுகிறது.  சிவகார்த்திகேயன் வாங்கிய கடனுக்கு பதிலாக லைக்கா நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணித் தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் டான் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.  மேலும் அயலான் திரைப்படமும் வெளியீட்டிற்கு தயாராகிக் கொண்டு உள்ளது. 

நெல்சன் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.  இந்த படங்கள் முடிவடைந்த பின்பு மீண்டும் இவர்களது கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.  இந்தக் கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ALSO READ Doctor Review: வெளியானது டாக்டர்; Twitter விமர்சனம் இதோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.