ராஷி கண்ணா எதிர்பார்க்கும் கணவன்

இமைக்கா நொடிகள் படத்தில் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை-3 என பல படங்களில் நடித்தவர், தற்போது சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிடித்தமான நடிகர் நடிகைகள் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழ் சினிமாவில் விஜய் தன்னை அதிகம் கவர்ந்த ஹீரோ என்று கூறியுள்ள ராசிகண்ணா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன் ஆகியோரை கூறியுள்ளார். அதேபோல் நடிகைகளில் அனுஷ்கா, சமந்தா இருவரையும் குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நான் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதனால் என்னைப்போலவே ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.