வனத்துறை அதிகாரி எனக்கூறி நரிக்குறவரிடம் துப்பாக்கியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓட்டம்..! Oct 10, 2021

கடலூர் மாவட்டம் கண்டியகுப்பம் அருகே நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம்  துப்பாக்கியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீ முஷ்ணம் குறவர் காலனி பகுதியை சேர்ந்த திட்டப்பிள்ளை, கண்டியகுப்பம் பகுதியில் வேட்டைக்கு சென்றுள்ளார். அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், தான் வனத்துறை அதிகாரி எனக் கூறி துப்பாக்கி லைசன்ஸ் உள்ளதா என கேட்டு மிரட்டியுள்ளார்.

இதை உண்மை என நம்பி கொண்டிருந்த நரிக்குறவரிடம், துப்பாக்கியை பறித்துக் கொண்டு அந்த நபர் திடீரென தப்பி ஓடியுள்ளார். இது குறித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.