1 வாரத்தில் ரூ.2.32 லட்சம் கோடி லாபம்.. அசத்தல் லாபம்.. வழக்கம்போல் ரிலையன்ஸ் தான் டாப் கெயினர் ..!

சந்தையில் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சந்தையானது ஏற்றம் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 2,32,800.35 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நிறுவனங்களும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டத் தொடங்கியுள்ளன.

இதனால் தற்போது பல நிறுவங்களின் சந்தை மதிப்பும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் தொடர்ந்து ஏற்றம் கண்ட நிலையில், அதில் வழக்கம்போல டாப் கெயினராக ரிலையன்ஸ் இடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனமும் இடம்பெற்றுள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி

இதே கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சென்செக்ஸ் 1293.48 புள்ளிகள் அதிகரித்து அல்லது 2.20% அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 2.13% சரிவினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பல நிறுவனங்களின் பங்கு விலையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்தது. இதற்கிடையில் பல நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 93,823.76 கோடி ரூபாய் அதிகரித்து, 16,93,170.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 3.84% அதிகரித்து, 2,671.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டிசிஎஸ் சந்தை மூலதனம்
 

டிசிஎஸ் சந்தை மூலதனம்

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், அதன் சந்தை மூலதனத்தில் 76,200.46 கோடி ரூபாய் அதிகரித்து 14,55,687.69 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.10% அதிகரித்து, 3,935.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் மூலதனம்

இன்ஃபோசிஸ் மூலதனம்

இதுவே மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 24,857.35 கோடி ரூபாய் அதிகரித்து, 7,31,107.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த அமர்வில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.94% அதிகரித்து, 1,723.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் மூலதனம்

பஜாஜ் பைனான்ஸ் மூலதனம்

இதே தனியார் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 12,913.91 கோடி ரூபாய் அதிகரித்து, 4,66,940.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிதி நிறுவனத்தின் பங்கு விலையானது, 0.20% குறைந்து, 7,732.20 ரூபாயாக குறைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி சந்தை மூலதனம்

ஹெச்டிஎஃப்சி வங்கி சந்தை மூலதனம்

தனியார் முன்னணி நிறுவனமான நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 10,881.09 கோடி ரூபாய் அதிகரித்து, 8,87,210.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 0.49% குறைந்து 1,602.65 ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது 7,403.24 கோடி ரூபாய் அதிகரித்து, 4,08,479.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது 0.17% அதிகரித்து, 703.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ சந்தை மதிப்பு

எஸ்பிஐ சந்தை மதிப்பு

இது நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பானது 5,310.14 கோடி ரூபாய் அதிகரித்து, 4,08,479.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,

இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 458.00 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 14,614.46 கோடி ரூபாய் குறைந்து, 6,20,362.58 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்று குறைந்து, 2,640.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 11,697.38 கோடி ரூபாய் குறைந்து, 3,83,866.29 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.82% குறைந்து, 1936.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 forms m-capitalizations surges Rs.2.32 lakh crore; Reliance industries and TCS as the top gainers

Eight of top most valued companies added Rs.2.32 lakh crore market capitalization, Reliance industries and TCS as the top gainers

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.