அடுத்த பரபரப்பை கிளப்பிய சசிகலா.. வெளியான அறிக்கை.! கலக்கத்தில் அதிமுகவினர்.!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வெளியே வந்த சசிகலா, சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக வை கைப்பற்றுவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவித்தார். சசிகலாவின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பின்னர் பல மாதங்களாக அமைதியாக இருந்து வந்த சசிகலா, சமீப காலங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் மூலம் பேசி வருகிறார். அவர்களிடம் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்து வருகிறார். இதனிடையே சசிகலா உடன் தொலைபேசியில் பேசிய அதிமுக தொண்டர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், விரைவில் வருவேன், எல்லாரையும் சந்திப்பேன் என சசிகலா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நான் வந்துவிட்டேன். எல்லாரும் அதிமுக பிள்ளைகள்தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார். இவர்களா? அவர்களா?  என்றெல்லாம் பார்க்கமாட்டார்.

இதையெல்லாம் பார்த்து தான் வளர்ந்து வந்திருக்கிறோம். என்னை பொறுத்தவரை எல்லாரும் ஒன்று தான். எல்லாரும் நம் பிள்ளைகள்தான். அதிமுக தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய் போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லாரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள். அனைவரும் காரோண தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.