அதிர்ச்சி! மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை!!

சென்னையில் மனைவி டார்ச்சர் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த வித்தியகுமார் என்பவர்  திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும், அவரது மனைவி நிஷாந்தினிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

அதனால் நிஷாந்தினி தனது அக்கா, மாமா ஆகியோருடன் சேர்ந்து கணவனை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களின் அட்டூழியங்கள் அதிகமாக, வித்தியகுமார் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வித்தியகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார் வித்தியகுமாரின் செல்போனின் இருந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றினர்.

suicide

தற்கொலை செய்துகொள்ளுவதற்கு முன்பு வித்தியகுமார் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தனது மனைவி அவரது உறவினர்களின் பேச்சை கேட்டு தன்னை செய்யாத கொடுமைகளை செய்ததாகவும்,  இரவில் தூங்கும்போது, கால் அருகே பேப்பரை கொளுத்துவது, அடிப்பது உள்ளிட்ட சித்திரவதைகளை செய்து வந்தார் என்று வேதனையுடன் பேசியிருந்தார்.

தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்துகிறார்  என அந்த வீடியோவில் கூறியுள்ளார். அத்துடன், எனது சாவுக்கு நிஷாந்தினி, கண்ணன் மற்றும் உஷா ஆகிய மூன்று பேர் தான் காரணம் என தெரிவித்திருந்தார்.

dmk

அந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக எடுத்துள்ள போலீசார் மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.