ஆப்பிள் iPhone SE3 2022: 5ஜி ஆதரவுடன் "பழக்கமான" வடிவமைப்புடன் வரும்!

ஹைலைட்ஸ்:

அடுத்த ஐபோன் பற்றி லேட்டஸ்ட் அப்டேட்
நாம் பேசுவது ஐபோன் எஸ்இ மாடல் பற்றி!
இது 5ஜி ஆதரவுடன் வரும்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
ஐபோன்
13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து விட்டதால்,
ஆப்பிள்
நிறுவனம் ஐபோன் எஸ்இ சீரீஸை நோக்கி தனது கவனத்தை திருப்ப அதிக வாய்ப்புள்ளது.

ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் எஸ்இ 2020 அப்டேட் செய்யப்படலாம் மற்றும் ஆப்பிளின் அடுத்த மலிவான ஐபோன் மாடல் சில தீவிர மேம்படுத்தல்களைப் பெறக்கூடும்.

ரியல்மி ப்ரிக் ப்ளூடூத் ஸ்பீக்கர்: பெயருக்கு ஏற்றபடி செங்கல் மாதிரியே டிசைன்!

வரவிருக்கும் ஐபோன் எஸ்இ 2022 மாடல் ஆனது தற்காலிகமாக இது ஐபோன் எஸ்இ 3 என்று அழைக்கப்படுகிறது மற்றும் ஒருவழியாக அது 5 ஜி திறன்களைப் பெறலாம் என்பது போல் தெரிகிறது.

மேலும், இது சமீபத்திய ஏ 15 பயோனிக் சிப்செட்டை பேக் செய்யலாம், அதாவது இது ஐபோன் 13 சீரிஸின் அதே செயல்திறனைப் பெறும். வேறு என்னென்ன அம்சங்களை பெறலாம்? இதுவரை வெளியான விவரங்கள் அனைத்தும் இதோ!

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

முன்னரே குறிப்பிட்டபடி, ஐபோன் எஸ்இ 3 மேம்படுத்தப்பட்ட சிப்செட் மற்றும் 5 ஜி இணைப்புடன் வர வேண்டும். ஜப்பானை தளமாகக் கொண்ட மகோதகரா (Macotakara) பிளாக் போஸ்டின் படி, இது iPhone SE 2020 மாடலின் அதே வடிவமைப்பு மற்றும் அளவீட்டுகளை பயன்படுத்தும்.

இதன் பொருள் வரவிருக்கும் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே – பெரிய மேல் மற்றும் கீழ் பெசல்களுடன் – இருக்கும். மேலும் “புகழ்பெற்ற” டச் ஐடி-கம்-ஹோம் பட்டன் காம்போவும் அலுமினிய ஃப்ரேம் உடன் தக்கவைக்கப்படும்.

வடிவமைப்பில் சுவாரசியம் இல்லை என்றாலும், மூன்றாம் தலைமுறை ஐபோன் எஸ்இ – ஒருவழியாக – 5 ஜி இணைப்பைப் பெறுவதால் செயல்திறனில் சில நல்ல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும், iPhone SE 2022 அல்லது
iPhone SE 3
ஆனது A15 சிப்செட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் X60 5G மோடம் போன்றவைகளையும் (ஐபோன் 13 தொடரில் காணப்படுவதை போலவே) பெறலாம்.

இருப்பினும், சில ஆதாரங்கள் ஆப்பிள் நிறுவனம் இதில் A14 பயோனிக் சிப்செட்டைப் பயன்படுத்தலாம் என்கிறது, இது ஐபோன் 12 சீரிஸில் காணப்படுகிறது, இது உண்மையாகும் பட்சத்தில் வடிவமைப்பிலும் பெரிய சுவாரசியம் இருக்காது, லேட்டஸ்ட் செயல்திறனும் இருக்காது, ஆனால் இது மாடலின் செலவை குறைக்க உதவும், இதன் வழியாக பட்ஜெட் வாசிகளும் இதை சொந்தமாக்க நேரிடலாம்.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 3 எப்போது வெளியாகும்?

ஐபோன் எஸ்இ 3 மாடல் 2022 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் (Spring) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது ஐபோன் எஸ்இ 2020 தொடங்கப்பட்டதைப் போல மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வெளியாகலாம்.

இந்த மாடல் கண்டிப்பாக இந்தியச் சந்தைக்கும் வர வேண்டும். மேலும் இந்த புதிய ஐபோன் எஸ்இ 3 அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒரு முக்கியமான சாதனமாக இருக்கலாம், ஏனெனில் ஆப்பிள் தனது ஐபோன் மினியை அதன் வரிசையில் இருந்து கைவிடுவதாக வதந்திகள் பரவி வருகிறது.

எனவே வருங்காலத்தில், பட்ஜெட் வாசிகளை ஒரு சிறிய மற்றும் மலிவான புதிய ஐபோனை வாங்க விரும்பும் போது அவர்கள் தங்கள் கவனத்தை ஐபோன் எஸ்இ 3 மீது திருப்பலாம்.

Apple-iPhone-SE-3 விவரங்கள்

முழு அம்சங்கள்

ஃபெர்பார்மன்ஸ்
Apple A14 Bionic

டிஸ்பிளே
6.0 inches (15.24 cm)

சேமிப்பகம்
64 GB

கேமரா
12 MP + 12 MP

பேட்டரி
2821 mAh

price_in_india
45990

ரேம்
3 GB

முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.