ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.! அதிமுக தலைமை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

அஇஅதிமுக வருகின்ற 17- 10 – 21 அன்று பொன்விழா காண இருக்கும் நிலையில், இந்த பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக அக்கட்சியின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் வெளியான அறிவிப்பில், “கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் படைத்திட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” வருகின்ற 17.10.2021 அன்று பொன்விழா காண இருக்கும் நிலையில், கழகத்தின் பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாக, கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று காலை ( 1.10.2021 – திங்கட் கிழமை), தலைமைக் கழக நிர்வாகிகள், கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இக்கூட்டத்தில், கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகங்களின் சார்பில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் கிளை, வார்டு, வட்ட அளவிலும்; 

கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கழகத்தின் பொன்விழா ஆண்டை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அதிமுகவின் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.