ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

புது டெல்லி: லக்கிம்பூர் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா, மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்ஐடி தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த போதிலும், மூன்று நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

ஆஷிஷ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்கும் வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த விவகாரம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. 

ALSO READ |  லக்கிம்பூர் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜார்

ஆஷிஷை விசாரிக்க 14 நாட்கள் காவலில் வைக்க எஸ்ஐடி கோரிக்கை வைத்தது. மேலும் விசாரணையின் போது ஆஷிஷ் மிஸ்ரா ஒத்துழைக்கவில்லை என்று எஸ்ஐடி தெரிவித்தது. இந்த காரணத்திற்காக, ஆஷிஷ் மிஸ்ராவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விரும்புகிறோம். தற்போது, ​​ஆஷிஷ் மிஸ்ராவின் மொபைல் போன் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் தரவு அல்லது விவரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். 

 

இது தவிர, ஆஷிஷ் மிஸ்ராவின் துப்பாக்கியின் தடயவியல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. காரில் இருந்து இரண்டு தோட்டாக்களை போலீசார் மீட்டனர். இப்போது அந்த தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வெடிமருந்துகளை குறித்து போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கியின் தடயவியல் பரிசோதனை செய்வதன் மூலம், அது எப்போதிலிருந்து பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவரும் என நீதிமன்றத்தில் போலீசார் தெரிவத்தனர்.

ALSO READ |  லக்கிம்பூர் கொலை சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உ.பி. அரசிடம் சரமாரி கேள்வி

12 மணி நேர விசாரணைக்கு பிறகு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். 

விவசாயிகள் மீது கார் ஏற்றி சம்பவம் மட்டும் ஆஷிஷ் மிஸ்ராவின் கைது தொடர்பாகவும் யோகி அரசு மற்றும் உபி காவல்துறை மீது கடுமையான குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன. அவரது தந்தை மத்திய அமைச்சர் என்பதால், அவருக்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டினர்.

போலீஸ் சம்மனுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இல்லை. வெள்ளிக்கிழமை, போலீஸ் அதிகாரி அவருக்காக மூன்று மணி நேரம் காத்திருந்தார், ஆனால் அவர் நேரில் ஆஜாராகவில்லை. மறுபுறம் உபி காவல்துறையின் அணுகுமுறையும் சந்தேகத்தை எழுப்பியது. ஏனென்றால், கொலை குற்றம் சாட்டப்பட்டவராக அவரை கையாளாமல், ஏதோ சாதாரணமாக ஆஷிஷுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் இந்த லக்கிம்பூர் வழக்கு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் ஒரு வலுவான கண்டனத்தையும் கருத்தையும் தெரிவித்ததை அடுத்து, அரசு உ.பி. அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

ALSO READ |  அக்டோபர் 3 முதல் 9 வரை லக்கிம்பூர் கெரியில் என்ன நடந்தது? முழுக்கதை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.