ஒற்றுமையை தொடர்ந்து ரசிகர்களை அப்செட் ஆக்குவோம்…கமலிடம் சவால் விட்ட பிரியங்கா

|

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வாரத்தை நிறைவு செய்துள்ளது. இந்த சீசனின் முதல் வார இறுதியில் கமல் வரும் எபிசோட்கள் நேற்றும் இன்றும் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியே கமல் பேசினார்.

வார இறுதியின் முதல் நாளான நேற்று, போட்டியாளர்கள் கூறிய கதை பற்றியும், அதில் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், தனது கருத்துக்கள் என பலவற்றை பகிர்ந்து வந்தார். தொடர்ந்து ரசிகர்களையும் கலாய்த்தார்.

வார இறுதியின் இரண்டாம் நாளும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது நாளான இன்று, பிக்பாஸ் வீட்டை நிர்வகிக்க பிரிக்கப்பட்ட டீம்கள் குறித்தும், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார் கமல். போட்டியாளர்களின் தனிப்பட்ட செயல்பாடுகள் பற்றி தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தார்.

அப்போது கமல், இன்னும் எளிமினேஷன் ப்ரோசஸ் ஆரம்பிக்கவில்லை. கன்பஷன் ரூம் இன்னும் கன்ஃப்யூஷன் ரூமாக மாறவில்லை. அது துவங்கிய பிறகு தான் யாரெல்லாம் பின்னாடி பேச போகிறார்கள். யாருடனெல்லாம் உரசல் நடக்க போகிறது என்று. இந்த ஒற்றுகை தொடர வேண்டும் என வாழ்த்தினால், ரசிகர்களை நான் ஏமாற்றியதாகி விடும். எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்றார்.

அதற்கு பதிலளித்த பிரியங்கா, இதே ஒற்றுமை தொடரும் சார். இந்த முறை எதிர்பார்ப்பது நடக்காமல் போகலாம். நிச்சயம் ஆடியன்சை அப்செட் ஆக்குவோம் என உறுதி அளித்தார். அதற்கு பார்ப்போம் என்றார் கமல்.

ஏற்கனவே பலருக்கு இடையில் சிறு சிறு உரல்கள் வந்து போகிற நிலையில் பிரியங்கா அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்னும் டாஸ்க், எளிமினேஷன் ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள இந்த ஓவர் கான்பிடன்ஷா என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.

பிக்பாஸ் கொழுத்தி போடுவதை தெரிந்து கொள்ளாமல் ஒரு வாரத்திலேயே பிரியங்கா இப்படி வார்த்தையை விட்டுட்டாறே என்கிறார்கள் நெட்டிசன்கள். பிரியங்காவும், சின்ன பொண்ணும் அனைவரும் சாப்பிட்ட பிறகு தான் தாங்கள் சாப்பிடுவதாக சொல்வதும், ஹவுஸ்மெட்களின் அன்பை பெற்று விட்டதும் பார்ப்பவர்களையும், கமலையும் சபாஷ் போட்டு பாராட்ட வைத்துள்ளது.

English summary
priyanka says this cooperation with housemates will continue till end. but kamal denied her statement. todays episode kamal praise all teams performance.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.