'கல்வியறிவற்றவர்கள் நாட்டிற்கு பாரம்; அவர்களால் நல்ல குடிமக்களாக மாற முடியாது' – அமித் ஷா

‘கல்வியறிவற்றவர்கள் நாட்டிற்கு பாரமாக இருக்கிறார்கள்; அவர்களால் நல்ல குடிமக்களாக மாற முடியாது’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

 

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்று 20 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சன்சாத் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ”கல்வியறிவற்றவர்கள் நாட்டிற்கு சுமை. அவர்களுக்கு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் தெரியாது அல்லது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கடமைகள் என்னவென்பதும் தெரியாது. அத்தகைய நபர் எப்படி ஒரு நல்ல குடிமகனாக இருக்க முடியும்? அதனால், கல்வியறிவு வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

 

image
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த சமயத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது மாணவர்களின் இடைநிற்றல். இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க மோடி கடுமையாக முயற்சி செய்தார். இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 37 சதவிகிதத்திலிருந்து 1 சதவீதமாக குறைந்தது. குஜராத் மாநிலத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்காக பாடுபட்ட பிரதமர் மோடி இப்போது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

 

பிரதமர் மோடி சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறுவது சில அரசியல் கட்சிகளின் வீண்பேச்சு. அமைச்சரவை கூட்டங்களில் அனைவரின் கருத்துக்கும் இடம் கொடுக்கக் கூடியவர், தமது கருத்துக்களை திணிப்பவர் அல்ல, அனைவரின் ஆலோசனையுடனேயே திட்டங்களை நிறைவேற்றுபவர் மோடி” என்று அமித் ஷா கூறினார்.

 

இதையும் படிக்க: லக்கிம்பூர் படுகொலையை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.