சசிகலா இதை செய்தால்தான் அரசியல் கவனம் கிடைக்குமாம்!

அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடங்க உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி
சசிகலா
ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும், அக்டோபர் 17ஆம் தேதி ராமாவரம் தோட்டத்துக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து சசிகலா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிமுகவை மீட்க முயற்சிகள் மேற்கொள்வதாக கூறுகிறார்கள்.

தேர்தலுக்குப் பின்னர் சசிகலா அலைபேசி வாயிலாக
அதிமுக
தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பேசிவந்தார். அதிமுக கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கண்டிப்பாக கட்சியை மீட்பேன் என பேசிவந்தார். கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது அதற்கான வேலைகளில் தீவிரம் காட்டிவருவதாக கூறுகிறார்கள்.

ஸ்டாலின் போடும் சாதி கணக்கு? அதிமுக விட்ட இடத்தை பிடிக்குமா திமுக?

சசிகலாவின் ரீ என்ட்ரி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு அதிமுக பிரதான எதிர்கட்சி என்ற இடத்தை பிடித்துள்ளது.

விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 35 ஆண்டுகள் பழமையானது!

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களை நிரூபித்துள்ள நிலையில் சசிகலா அதிமுகவை மீட்கப் போகிறேன் என்று சொல்வது பயனளிக்காது என்கிறார்
ரவீந்திரன் துரைசாமி
.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லி சென்று மோடி, அமித் ஷாவை சந்தித்த பின்னர்தான் சசிகலா எதிர்ப்பை பலமாக முன்னெடுக்கின்றனர். எனவே
பாஜக
இதன் பின்னால் இருக்கிறது. பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்தால்தான் சசிகலாவுக்கு அரசியல் கவனம் கிடைக்கும் என்பதே அவரது வாதமாக உள்ளது.

மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் – பள்ளிக்கல்வித் துறை செம திட்டம்!

டிடிவி தினகரனுக்கு தொடக்கத்தில் கிடைத்த ஆதரவுக்கு அவர் பாஜக எதிர்ப்பில் அந்த சமயம் உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.