டோனிக்கு தனுஷ் -லோகேஷ் கனகராஜ் பாராட்டு

புதுடெல்லி,
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனியை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளனர்.

ஐபிஎல் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.
சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி. இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ” 7 அவ்வளவு தான், அதுதான் டுவிட் என டோனியின் ஜெர்ஸி எண்ணை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 
 
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை சிங்கம் எப்போதுமே சிங்கம் என டோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.