நாமினேஷன் பட்டியலில் ப்ரியங்கா; புதிய ப்ரோமோ வெளியீடு

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு

இந்த நிலையில் தற்போது இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேஷனுக்கு தேர்வான நபர்கள் நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேஷனுக்கு தேர்வான நபர்கள் நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாதியா, நாமினேஷன்ல்ல என் பெயர் தான் ஃபர்ஸ்ட் வச்சு செஞ்சிட்டிங்களே என்று தெரிவிக்க பிரியங்கா ஆடிப்பாடு, கொளுத்தி போடு என்று கொண்டாட்டத்துடன் கூறுவது ப்ரோமோ வீடியோவில் தெரிகிறது. மேற்கண்ட எட்டு பேர்களில் இந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார். கடந்த வாரம் திருநங்கைகள் படும் துயரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க நமிதா மாரிமுத்து பேசியிருந்தார். இதனை அடுத்து, பார்வையாளர்கள் மத்தியிலும், இணையதளவாசிகளிடமும் நமிதா மாரிமுத்துவிற்கு ஆதரவு பெருகியது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பிக்பாஸ் முதல் நாமினேசன்; இவர்தான் டார்கெட்- Watch

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.