புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு – Madras HC

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னதாக, புதுச்சேரியில், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இட ஒதுக்கீட்டை மறுத்தது அரசியல் சாசனத்தையே கேலிகூத்தாக்கும் செயல் என்று திமுக அமைப்புச் செயலாளர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தது
திமுகவின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றவும் பரிந்துரை செய்தார்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என புதுச்சேரி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பண்டிகை காலங்கள் மற்றும் உள் ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகள் இருக்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ALSO READ | கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

இந்திய அரசியலமைப்பு பிரிவு 243-D உட்பிரிவு 6 மற்றும் பிரிவு 243T உட்பிரிவு 6-ன் படியும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய வழி உள்ளது.

இதன் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை 07.03.2019 தேதியில் அரசாணை எண்.47 மற்றும் 48 ஆகிய அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5% பழங்குடியினருக்கு 0.5% இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் இருந்த இடஒதுக்கீடு உரிமை 06.10.2021 தேதியிட்ட அரசாணையின் மூலம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய அரசாணை வெளியிடுவதற்கு முன்னரே அரசாங்கத்தை கலந்து ஆலோசணை செய்யாமல், மாநிலதேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது கண்டனங்களை எழுப்பிய நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல்களை நிறுத்தி வைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Also Read | சட்டம் – ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு – அதிமுக கண்டனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.