புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவு Oct 11, 2021

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இடஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டதாக  புதுச்சேரி அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசமைப்பு சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி,  உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க  உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.