பொம்பளனா அவ்வளவு கேவலமா சிவகார்த்திகேயன்?: மகளிர் அமைப்புகள் போராட்டம்

ஹைலைட்ஸ்:

டாக்டர் பட காட்சிக்கு எதிராக போராட்டம்
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட காட்சிக்கு எதிர்ப்பு

நெல்சன் திலீப்குமார்
இயக்கத்தில்
சிவகார்த்திகேயன்
நடித்த
டாக்டர்
படம் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 7.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

டாக்டர் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டாக்டர் படத்தில் வரும் ஒரு காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

விளையாட்டில் தோல்வி அடையும் நபருக்கு நைட்டி அணிவித்து, தலையில் பூ வைத்து பெண் போன்று மாற்றுவார்கள். தோல்வி அடைந்ததால் அப்படி ஒரு வேஷம். அந்த காட்சி தான் பெண்கள் அமைப்பினரை கோபம் அடைய செய்திருக்கிறது.

பெண்கள் என்றால் அவ்வளவு கேவலமாக போச்சா?. போட்டியில் தோற்றவரை அசிங்கப்படுத்த பெண் வேடம் தான் போட வேண்டுமா?. அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நெல்சன் திலீப்குமாரும், சிவகார்த்திகேயனும் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கோவிட் நேரத்தில் சிறந்த சிரிப்பு வைத்தியம்: டாக்டர் படத்தை பாராட்டிய ஷங்கர்
இதற்கிடையே டாக்டர் படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டி ட்வீட் போட்டார். கோவிட் நேரத்தில் சிறந்த சிரிப்பு வைத்தியம் கொடுத்திருக்கிறது டாக்டர். அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததற்காக ஹாட்ஸ் ஆஃப் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் மொத்த குழுவுக்கு வாழ்த்துக்கள். தியேட்டர் அனுபவம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.