பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

ஹைலைட்ஸ்:

மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது
தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதி
மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு அறிவிப்பு

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படும்
நோபல் பரிசு
, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம்,
பொருளாதாரம்
உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேஜியன் நோபல் கமிட்டியால் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பவர் கட்; இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு,
டேவிட் கார்ட்
, ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதியும், மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.