மகன் அரசியல் என்ட்ரிக்கு வைகோ காட்டிய க்ரீன் சிக்னல்!

ஹைலைட்ஸ்:

மதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்டது; என்னால் உருவாக்கப்பட்டதல்ல
அனைத்துத் தகுதிகளும் உடையவர் துரை வைகோ என அழைத்துக் கொண்டு போகிறார்கள்
துரை அரசியலுக்கு வரக் கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று பார்த்தேன்

மதிமுகவில் சமீபகாலமாக வைகோவின் மகன் துரை
வைகோ
நிர்வாகிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். சட்டமன்றத் தேர்தலின் போதும், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போதும் தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.
மதிமுக
கூட்டங்களில் துரை வைகோவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பிரதானப்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த வைகோ, எனது மகனும் கஷ்டப்பட வேண்டாம், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்றார். மேலும், துரை வைகோவுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்கப்படுவது தொடர்பாக வெளியான தகவலுக்கு, வருகிற 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அப்போது பெரும்பான்மை முடிவு என்ன என்பது தெரியவரும் என்றும் வைகோ தெரிவித்தார்.

இந்த நிலையில், விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் மதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், பேச்சாளருமான எரிமலை வரதன் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ துரை அரசியலுக்கு வரக் கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று பார்த்தேன். அதனை மீறி இப்போது காரியங்கள் நடக்கின்றன. என்னை மீறித் தொண்டர்கள், எங்களுக்கு வழிகாட்டுவதற்கு நல்லதொரு வழிகாட்டி வேண்டும். அதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர்
துரை வைகோ
என அழைத்துக்கொண்டு போகிறார்கள். இதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை” என்றார்.

சசிகலா இதை செய்தால்தான் அரசியல் கவனம் கிடைக்குமாம்!

மதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்டது; என்னால் உருவாக்கப்பட்டதல்ல என்று தெரிவித்த வைகோ, தொண்டர்களின் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறையில் நிறைவேற்றப்படும் என்றும் சூசகமாக தனது மகன் துரையின் அரசியல் வருகைக்கு ஓகே சொல்லியுள்ளார்.

மொட்டை விவகாரம்; கருத்து மோதலில் சேகர்பாபு vs துரைமுருகன்

அதேசமயம் நான் அவரை ஊக்குவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள வைகோ, சில குடும்பங்களில் வாரிசுகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்களைக் கொண்டுவந்து இங்கே அமர வைக்க வேண்டும் என முதலில் இருந்தே திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.