மதுக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் பெண் உயிரிழப்பு..! Oct 11, 2021

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் மதுக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் பெண் உயிரிழந்தார்.

செயின்ட் பால் நகரில் மதுக்கடையில் ஏராளமானோர் மது அருந்திக் கொண்டிருந்தபோது 3 இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.